×

10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மோடி வாக்குறுதி தந்தாரே?.எங்கே அந்த வேலைவாய்ப்புகள்? :மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

டெல்லி : பிரதமர் மோடி அறிவித்த மேக் இன் இந்தியா எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தொழில் உற்பத்தித் துறைக்காக பெருமுழக்கத்துடன் மோடி அரசு அறிவித்த திட்டங்கள் முற்றிலும் செயலற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ள கார்கே, பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்விகளை அடுக்கி உள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “10 ஆண்டுகளில் இந்திய ஜிடிபியில் தொழில் உற்பத்தித் துறையின் பங்கு 16%-ல் இருந்து 13% ஆக சரிந்தது என்?. மோடி ஆட்சியில் தொழில் உற்பத்தித் துறையின் சராசரி வளர்ச்சி சரிந்தது ஏன்?. காங்கிரஸ் ஆட்சியில் 7.85% ஆக இருந்த தொழில் உற்பத்தித் துறை சராசரி வளர்ச்சி, மோடி ஆட்சியில் 6% ஆக சரிந்தது ஏன்?. 2022-க்குள் தொழில் உற்பத்தித் துறையில் 10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மோடி வாக்குறுதி தந்தாரே?.எங்கே அந்த வேலைவாய்ப்புகள்?.

இந்தியாவின் தொழில் உற்பத்தித் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் சரிந்தது ஏன்?. பிஎல்ஐ எனப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டங்கள் தோல்வி அடைந்தது ஏன்?. ஒன்றிய அரசின் முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படாதது ஏன்?. உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் (பிஎல்ஐ) ஜவுளித் துறைக்கு ஒதுக்கிய நிதியில் 96% செலவிடாதது ஏன்?. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு பிஎல்ஐ திட்டத்தின் கீழ் எந்த நிதியும் ஒதுக்கப்படாதது ஏன்?. காங்கிரஸ் ஆட்சியில் 549%-ஆக இருந்த ஏற்றுமதி வளர்ச்சி விகிதம், மோடி ஆட்சியில் 90 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது ஏன்?. பாஜகவின் போலி தேசியவாதத்தால்தானே சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 45% உயர்ந்தது?,”இவ்வாறு பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

The post 10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மோடி வாக்குறுதி தந்தாரே?.எங்கே அந்த வேலைவாய்ப்புகள்? :மல்லிகார்ஜுன கார்கே கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,MALLIKARJUNA KARKE ,Delhi ,Congress ,President ,Mallikarjuna Kargay ,India ,Modi government ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…